தீபாவளிப் பண்டிகை: ரெயில்வே முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை,

தீபாவளி பண்டிகைக்கு, ரெயில் மூலம் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 18ந் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் பணியாற்றி வரும் வெளி மாநில, மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஊருக்கு செல்வது வழக்கம். அவர்களின் ரெயில் பயணத்தற்கான டிக்கெட் முன்பதிவு  இன்று தொடங்குகிறது.

ரெயிலில் பயணிக்க 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் முறை நடைமுறை இருப்பதால், அக்டோபர் 16ந்தேதி ஊருக்கு போக விரும்புபவர்கள் தவறாது இன்றே முன்பு செய்துகொள்ளலாம்.

அக்டோபர் 17ம் தேதி ஊருக்குசெல்பவர்கள் நாளையும் தீபாவளி நாளில் பயணம் செய்ய விரும்புவோர் செவ்வாய்க்கிழமையும் முன்பதிவு செய்யலாம்.

கடந்த ஆண்டு முன்பதிவு தொடங்கி, சில நிமிடங்களிலே நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.


English Summary
Deepavali festival: Railway booking starts today