சென்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியதற்கு கேந்தர் ஜாதவ் உடைய மோசமான பேட்டிங் மட்டுமே காரணம் என சமூக வலைதளங்களில் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் திட்டத் தொடங்கினர்.


இந்திய அளவில் சமூக வலைதளவாசிகள் கேந்தர் ஜாதவ் உடைய பேட்டிங் குறித்து விமர்சிக்கத் தொடங்கி ட்ரோல் செய்த மீம்ஸ் மற்றும் பதிவுகளால் ஊடகங்களில் வெளியாகும் அளவிற்கு கவனம் பெற்றது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் தோல்விக்காக கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் கேந்தர் ஜாதவ் ஆகிய ஒருவரின் மகள்களுக்கு பாலியல் பலாத்கார அச்சுறுத்தல் கொடுக்கும் அளவிற்கு சமூக வலைதளங்களில் மோசமான கமெண்ட்கள் பதிவாகி வருவதாக மீம்கள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து, ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வந்தது.

விளையாட்டு வீரர்கள் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் தோல்வியை சந்திக்கும் போது ஏற்படும் வெறுப்பால் தனிப்பட்ட முறையில் ரசிகர்களால் தாக்கப்படுவது வழக்கமான ஒன்று, அந்த வெறுப்புணர்வு தற்போது விளையாட்டு வீரர்களின் மனைவி, குழந்தைகள் வரை சென்றுள்ளது. அது சாதாரண ட்ரோல், அச்சுறுத்தலை மீறி பலாத்கார அச்சுறுத்தல் மற்றும் தாக்குவது வரை நீள்கிறது.

கேகேஆர் உடனான ஆட்டத்தின் தோல்விக்கு பிறகு தோனி மற்றும் அவர் மனைவி சாக்சி ஆகிய இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அச்சுறுத்தல் கமெண்ட்கள் பதிவாகியதாகக் கூறப்படுகிறது. இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து வெளியான கமெண்ட் பதிவுகளின் ஸ்க்ரீன்ஷார்ட்களை ட்விட்டர் மற்றும் முகநூலில் பகிர்ந்து.வருகின்றனர்.

சமீபத்தில் விராட் கோஹ்லி விளையாட்டு சரியில்லை என அவரது மனைவி அனுஷ்காவை இலக்காகினர். கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினரையும் ட்ரோல் மற்றும் இழிவுப்படுத்தும் செயல்களை சமூக வலைதளங்களில் செய்து வருகிறார்கள். ட்ரோல்கள் மற்றும் வெறுப்பு ஒரு கட்டத்தில் எல்லைமீறி செல்வதை மக்கள் உணர வேண்டும், குழந்தைகள், பெண்கள் மீது வன்மத்தைக் காண்பிப்பது கண்டிக்கபட வேண்டியது.