நடப்பு உலகக்கோப்பைத் தொடரின்போது சில வழக்கத்திற்கு மாறான விஷயங்களை செய்துவருகிறார் மகேந்திர சிங் தோனி.

அவர் பயன்படுத்தும் பேட்களில் உள்ள பலதரப்பட்ட ஸ்டிக்கர்கள் அந்த வித்தியாசத்தைப் பறைசாற்றுகின்றன. பொதுவாக, தோனி Reebok பிராண்ட் பேட் பயன்படுத்துவதுதான் பல ரசிகர்களுக்கும் பரிச்சயம்.

ஆனால், இந்த உலகக்கோப்பைத் தொடரில் வேறுசில ஸ்டிக்கர்கள் கண்ணில் தெரிகின்றன. இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில், தொடக்கத்தில் SG லோகோ பேட்டுகளைப் பயன்படுத்தினார்.

அதேசமயத்தில், தனது இன்னிங்சின் கடைசி கட்டங்களில் BAS லோகோ பேட்களைப் பயன்படுத்தினார்.

இதுதொடர்பாக தோனியின் மேலாளர் அருண் பாண்டே கூறுவதாவது, “தோனி இதைப் பணத்திற்காக செய்யவில்லை. அந்தப் பணம் அவரிடம் ஏற்கனவே போதுமான அளவில் இருக்கிறது. தனக்கு பல்வேறு கட்டங்களில் உதவிகரமாக இருந்த அந்த பேட்களுக்கு அவர் தனது நன்றியை செலுத்துவதற்கே, அவற்றைப் பயன்படுத்துகிறார்” என்று கூறியுள்ளார்.