நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என மதுரையை சேர்ந்த முருகேசன் மீனாட்சி தம்பதிகள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

தனுஷ் தன்னுடைய மகன் என்றும் அவரிடம் உள்ள கோடிக்கணக்கான பணம் தங்களுக்கு தேவையில்லை என்றும், அவர் தங்களது மகன் என்ற உரிமை மட்டும் போதும் என்றும் மதுரையை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கின் இடையே, தனுஷூக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தகவலை மறுத்த தனுஷ் தரப்பு இந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரியது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல்  நீதிபதி ஒத்திவைத்தார்.  இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தனுஷின் கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.