தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் தனுஷ். அந்தப் படம் தவிர்த்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் படமொன்றில் நடிக்கவுள்ளார்.

‘தோழி பிரேமா’, ‘மிஸ்டர் மஜ்னு’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வெங்கி அட்லூரி. இந்த படத்தை சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. எப்போது படப்பிடிப்பு என்று தெரிந்தவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனக் கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் தயாராகவுள்ளது.