சென்னை: ‘உங்கள் துறையில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் இன்றுமுதல் தமிழ்நாடு காவல்துறையினரின் குறைகளை டி.ஜி.பி., சைலேந்திரபாபு கேட்கிறார் .
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, ‘உங்கள் துறையில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் காவலர்களின் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி காவலர்களின் குறைகள், ஊதிய முரண் பாடுகளைக் களைதல் உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.
எற்கனவே விழுப்புரம் உள்பட சில மாவட்டங்களில் மாவட்ட டிஐஜிக்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்ட நிலையில், தற்போது, டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் முகாம் நடைபெற உள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில், மாவட்ட எஸ்.பி.க்கள் கமிஷனர்கள் தலைமையில் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் நிறைவேற்ற முடியாதவை மண்டல ஐ.ஜி.க்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, இன்றுமுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இம்முகாம் இன்று சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் துவங்குகிறது. முகாமில், சிறப்பு பிரிவுகள் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட போலீசார் மனு அளிக்க உள்ளனர். டிசம்பர் ந்தேதி ந்தேதி டி.ஜி.பி. அலுவலகத்தில் சென்னை நகர் போலீசாருக்கும் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
தொடர்ந்து, டிசம்பர் 9ந்தேதி கோவை கமிஷனர் அலுவலகத்தில் மேற்கு மண்டல போலீசாருக்கும் , டிசம்பர் 10ந்தேதி காலை 10:00 மணிக்கு திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் மத்திய மண்டல போலீசாருக்கும் மாலை 4:00 மணிக்கு மதுரை கமிஷனர் அலுவலகத்தில் தென்மண்டல போலீசாருக்கும் முகாம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.