சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் 5 கிமீ தூரம் வரிசையில் நின்று தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த மாதம் 30 ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று புத்தாண்டு தரிசனத்துக்காக நள்ளிரவில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர்.

அதிகாலை 3 மணிக்குத் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார். பிறகு பக்தர்கள் 18ஆம் படி வழியாகச் சென்று சன்னிதானத்தில் அய்யப்பனைப் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பம்பை முதல் சன்னிதானம் வரை 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.  ஏற்கனவே சபரிமலையில் தரிசனம் செய்வதற்கான இணையம் முன்பதிவு வருகிற 15-ந் தேதி வரை முடிவடைந்து விட்டது.

எனவே நேற்று இணையத்தில் முன்பதிவு செய்த 80 ஆயிரம் பக்தர்கள் மற்றும் உடனடி பதிவு செய்த பக்தர்களும் திரண்டு வந்ததால் 95 ஆயிரம் பேர் வரை தரிசனம் செய்திருக்கலாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.