டில்லி

த்திய அரசு 100 நாள் வேலைக்கு ஆதார் அட்டையை அடிப்படைத் தேவையாக்குவதை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.

100 நாட்கள் வேலை எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணியாளர்களுக்கு, ஆதாா் அடிப்படையிலான பணப் பரிவர்த்தனையில் ஊதியம் வழங்கும் நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.  இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.`

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெயராம் ரமேஷ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 “சுமார் 25.60 க்ப்ப்டி பேர் 100 நாள் வேலை திட்டத்தில் உள்ளனர். இவர்களில் 14.33 கோடி பேர் செயல்முறை தொழிலாளர்களாக கருதப்படுகின்றனர். டிசம்பர் 27 ஆம்  தேதி நிலவரப்படி பதிவு செய்யப்பட்ட மொத்த தொழிலாளர்களில் 34.8 சதவீத (8.9 கோடி) தொழிலாளர்கள் மற்றும் 12.7 சதவீதம் (1.8 கோடி) செயல்முறை தொழிலாளர்கள் ஆதார் அடிப்படையிலான சம்பள திட்டத்துக்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்படுகின்றனர். 

மேலும் இந்த திட்டத்தில் ஆதாரை அடிப்படையாகக் கொண்ட அமைப்பைப் பயன்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இருப்பதாக தொழிலாளர்கள், நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியபோதும், மோடி அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. 

இதன் மூலம் 100 நாள் வேலைத் திட்டம் மீதான பிரதமரின் நன்கு அறியப்பட்ட அலட்சியத்துக்குத் தொழில்நுட்பத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவது நிரூபணமாகிறது. மத்திய அரசு ஏழைகளின் நலனை பாழ்படுத்தும் வகையிலான இத்தகைய தொழில்நுட்பத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். மிகவும் பின்தங்கிய இந்தியர்களின் சமூக நலன்களை மறுக்க ஆதாரை ஆயுதமாக்குவதை நிறுத்த வேண்டும்” 

என்று தெரிவித்துள்ளார்.