அயோத்தி

வரும் 22 ஆம் தேதி திறக்கப்படும் அயோத்தி ராமர் கோவிலுக்கான ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

வரும் 22 ஆ,ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், திறக்கப்படுகிறது. ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவைக் காணப் பொதுமக்களை அனுமதிக்க வரும் 22 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்க கோரி மகாராஷ்டிர முதல்வர்ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர். அதுல் பட்கல்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில்.

“ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கான ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது  பிரபல சிற்பி யோகிராஜ் அருண் உருவாக்கிய ராமர் சிலை சிலை அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22 ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்படும்” 

என அறிவித்துள்ளார்.