திருப்பதி: ஜனவரி 1-ம் தேதி முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக்கவசம் அணிவது கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவிலில் திறக்கப்படும் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு பல லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இலவசம் மற்றும் கட்டண டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்பதால், ஜனவரி 1-ம் தேதி முதலே பக்தர்கள் திருப்பதி செல்ல முன்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், கொரோனா பரவல் மீண்டும் பல நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், இந்தியாவிலும் மக்கள் முக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.
இதைத்தொடர்ந்து, புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்’ என்று தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.