டெல்லி: திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் கோவில்களுடன் நன்கொடை தரவில்லை என்று  தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில்  கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், திருமணம் மண்டபம் கட்டுவதற்கு பதில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளை கட்டலாம் என தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு, கோவில் நிதிகளைக்கொண்டு, வருமானம் பார்க்கும் நோக்கில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது அறநிலையத்துறையின் சட்டத்துக்கு முரணானது என்று கூறப்படுவதுடன், பக்தர்கள் வழங்கும் நிதியை கொள்ளையடிக்வே இதுபோன்ற நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ஏற்கனவே மதுரை, பழனி மற்றும் திருவண்ணாமலையில் கோவில் நிதியில் வணிக வளாகங்கள், திருமணம் கட்டும் அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதற்கிடையில்,   மதுரை மாவட்​டம் எழு​மலையைச் சேர்ந்த ராம ரவிக்​கு​மார் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில்  தொடர்ந்த வழக்கில்,   “பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயிலுக்கு சொந்​த​மான நிதி​யிலிருந்து ரூ.4.54 கோடி மதிப்​பீட்​டில் உத்​தம​பாளை​யத்​தில் திருமண மண்​டபம் கட்ட முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இது அறநிலை​யத்​துறை விதி​களுக்கு எதி​ரானது. கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டக்​கூ​டாது.  உத்​தம​பாளை​யம் திருக்​காளத்​தீஸ்​வரர் மற்​றும் நரசிங்​கப் பெரு​மாள் கோயில் பெயரில் உத்​தேச​மாக ரூ.400 கோடி நிதி உள்​ளது. இந்​நிலை​யில், பழநி கோயில் நிதியை பயன்​படுத்தி உத்​தம​பாளை​யத்​தில் திருமண மண்​டபம் கட்ட தடை விதிக்க வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற மதுரை கிளை, அது தொடர்​பான அரசாணையை ரத்து செய்து கடந்த மாதம் உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

இந்த மனு மீதான விசா​ரணை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம்​நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது. அப்​போது இதுதொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை கிளை பிறப்​பித்​துள்ள உத்​தர​வுக்கு இடைக்​கால தடை விதிக்க மறுத்த நீதிப​தி​கள், பக்​தர்​கள் அளிக்​கும் காணிக்கை திருமண மண்​டபங்​களை கட்​டு​வதற்​காக அல்ல. அந்த திருமண மண்​டபங்​களில் ஆபாச பாடல்​களை ஒலிபரப்ப கோயில் நிலம் பயன்பட வேண்​டுமா என்​றும் கேள்வி எழுப்​பினர்.

பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு,  திருமண மண்​டபங்​களுக்கு பதிலாக பள்​ளி, கல்​லூரி​கள் என கல்வி நிலை​யங்​களை​யும், மருத்​து​வ​மனை​களை​யும்​ கட்​டலாம்​ என கருத்​து தெரி​வித்​து வி​சா​ரணை​யை நவ.19-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

[youtube-feed feed=1]