மதுரை: கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு விரதம் இருக்க யாகங்கள் நடத்த அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகஅரசின் இந்த நிலைப்பாடு பாராட்டுதலுக்குரியது என்று தெரிவித்து உள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் விரதம் இருப்பது வாடிக்கையானது. ஆனால், இதற்கு தமிழகஅரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, கோவிலுக்கு வெளியே உள்ள கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு விரதம் இருக்க அனுமதி அளித்த தமிழக அரசின் நிலைப்பாடு சரி. கோவிலுக்குள் யாகங்கள் நடத்த அனுமதி இல்லை என்று கூறியது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணம் கொடுத்தால் நேரடியாக கடவுளை தரிசிக்கலாம் என விமர்சித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள கோயில்களின் உள் பிரகாரத்தில் யாகங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாகவும், யாகங்கள் கோயிலின் வெளியே நடைபெற வேண்டும் என்று தெரிவித்ததுடன், திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கோயில் உள் பிரகாரத்தில் தங்க அனுமதி இல்லை என்ற நிலைப்பாடு மிக சரியானது என தெரிவித்தது.
மேலும், திருச்செந்தூரில் அனுமதி கேட்பது போல திருப்பதி கோவில் உள்ளே சென்று விரதம் இருக்க அனுமதி கேட்க முடியுமா.? என்றும் கேள்வியையும், உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு எழுப்பியது. மேலும், தமிழகத்தில் உள்ள கோயில்களில் தேவையில்லாத நடைமுறைகளை ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயிலுக்கு வெளியே மட்டுமே யாகங்கள் நடத்த இந்து அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.