ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரை அழகுபடுத்தும் திட்டத்தை அம்மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

வழிபாட்டிற்காக 22 படித்துறைகளுடன் பல்வேறு பொழுபோக்கு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளுடன் சம்பல் நதிக்கரை மேம்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான 225 உயரம் கொண்ட சம்பல் மாதா பளிங்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது பைங்குக்கல்லால் ஆன மிக உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, நேருவின் முக சிற்பம், சிறுவர்களுக்கான பொழுபோக்கு பூங்கா, லேசர் ஷோ உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடப்பெற்றுள்ளது.

125 பண்டிதர்கள் வழிபாடு நடத்த கோட்டா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட்டுள்ள சம்பல் நதிக்கரையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலோட் நாளை திறந்து வைக்கிறார்.