பெங்களூரு:

தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் 2 பா.ஜ., கட்சியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி மாநிலங்களவையில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு வருகிற 19- ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த தேர்தல் நடப்பதாக இருந்தது. அது தள்ளிவைக்கப்பட்டு 19- ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ராஜீவ் கவுடா (காங்கிரஸ்), பி.கே.ஹரி பிரசாத் (காங்கிரஸ்), பிரபாகர் கோரெ (பாஜக), குபேந்திர ரெட்டி (மஜத) ஆகியோரின் பதவிக்காலம் வரும் 26-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து முன்னாள் பிரதமர் தேவகவுடா மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும்இரானா கடாடி ஆகிய 4 பேரும் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தனது 60 வருட அரசியல் வாழ்க்கையில் இரண்டாம் முறையாக மாநிலங்களவைக்கு தேவகவுடா தேர்வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.