யோத்தி

ன்று அயோத்தியில் நட்ந்த ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் விவரம் வெளியாகி உள்ளது.

இன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது . பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவிலின் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைப்பெற்றது. விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட முக்கிய நபர்கள்:-

* தென்னிந்திய நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி சுரேகா, ராம்சரண், பவன் கல்யாண், காந்தாரா பட நடிகர் ரிஷப ஷெட்டி

* பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், கங்கனா ரனாவத், மாதுரி தீக்ஷித் மற்றும் அவரின் கணவர் ஸ்ரீராம் நேநே, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர். ஹேமமாலினி, விக்கி கவுஷல், கத்ரீனா கைப், ஆயுஷ்மான் குரானா, ரன்பீர் கபூர், அலியா பட், ஜாக்கி ஷெராப், அனுபம் கேர், ரன்தீப் ஹூடா மற்றும் அவரது மனைவி லின் லைஷ்ராம், விபுல் ஷா மற்றும் அவரது மனைவி ஷெபாலி ஷா

* தயாரிப்பாளர்கள் மதுர் பண்டார்கர், மகாவீர் ஜெயின், ரோஹித் ஷெட்டி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் இயக்குனர் சுபாஷ் காய் மற்றும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி

* தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 1980-களில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர், சீதை வேடங்களில் நடித்த அருண் கோவில், தீபிகா சிகாலியா

* பாடகர்கள் சோனு நிகம், அனுராதா பவுட்வால் மற்றும் சங்கர் மகாதேவன், ஜூபின் நவுடியல்

* விளையாட்டு வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சாய்னா நேவால், மிதாலி ராஜ், பி.டி. உஷா, வெங்கடேஷ் பிரசாத்

* தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினர் நீடா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா மேத்தா அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் பிரமல் உடன் கலந்துகொண்டார். மேலும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அனன்யா பிர்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்