திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில். 

Must read

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில். 

இறைவர் சௌந்தர நாயகி உடனமர் புஷ்பவனேஸ்வரர். 

பாண்டிய நாட்டின் 64 திருவிளையாடல்களில் 36வது தலமாக இத்தலம் விளங்குகிறது  வடகிழக்கில் கோயில் அமைப்பு.  குலசேகரபாண்டியன் முடி சூடிக் கொள்ளும் போது நெற்கதிரை முடியாகத் தரித்ததால் இப்பெயர் ஏற்பட்டது. பசு மாட்டை கொன்ற பாவம். பித்ரு சாபம் நீக்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது.

பிரமன் வழிபட்ட தலம். வைகை வடக்குநோக்கி பாய்வதால் மிகவும் விசேஷமான தலம். மற்றுமொரு சிறப்பாக இறந்தோரின் எலும்புகள் இந்த நதிக்கரையில் புதைக்கப் பெற்றால் நற்கதி கிடைக்கும். மூவர் பெருமக்களுக்கு வைகை நதி சிவலிங்கமாக தோன்றியதால் மதுரையிலிருந்து தலத்தை மிதிக்க அஞ்சி வணங்க நந்தியை விலகச் சொல்ல நந்தி இத்தலத்தில் சாய்ந்து உள்ளது. 

அவ்வாறு தொழுத இடம் மூவர் மண்டபம் இங்கு உள்ளது. பொன்னையாள் என்பவருக்காக இறைவன் சித்தராக வந்து இரசவாதம்செய்து பொன் கொடுக்க. அவள் இறைவனின் அருளை கண்டு சிவலிங்கம் அமைத்து வழிபட அது அழகாக இருப்பதை கண்டு ஆசையுடன் லிங்கத்தை கிள்ளி முத்தமிட்டதால் கிள்ளிய அடையாளம் திருமேனியில் உள்ளது. 

இத்தலத்தில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் மிகவும் விசேஷம். சிறப்பான கருங்கல் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட ஆலயம் நடராஜர் சிற்பம் அற்புதமாக இத்தலத்தில் இருக்கும்.  நவராத்திரி திருவிழா விசேஷமாக கொண்டாடப்படும். 

 

More articles

Latest article