தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் நேர்முகத் தேர்வுகளுக்கு வரும் தேர்வர்களின் விவரங்கள் நேர்காணல் குழுவுக்கு வழங்கப்பட மாட்டாது என்ற புதிய நடைமுறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ளது.

தேர்வர்களின் பெயர், ஊர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் தேர்வுக் குழுவுக்கு தெரிவிக்கப்படாது என்றும் தேர்வர்களுக்கு அகர வரிசைப்படி அடையாளங்கள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புதிய நடைமுறை நேர்முகத் தேர்விலும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வில் ஏற்கனவே பின்பற்றப்படும் Random Shuffle முறையுடன் இந்த புதிய நடவடிக்கையும் இனைந்து பின்பற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.