அருள்மிகு ஶ்ரீ அழகிய லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்
(ராஜராஜ சதுர்வேதி மங்கலம்) எண்ணாயிரம் (கிராமம்), விக்கிரவாண்டி வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
சோழர்களால் கட்டப்பட்ட, சுமார் 1000-ஆண்டுகள் பழமையான இந்த வைணவ ஆலய கருவறையில் திருமால், ஶ்ரீ அழகிய நரசிம்மர் எனும் திருப்பெயர் கொண்டு, ஶ்ரீ மகாலட்சுமியை தன் மடியில் அமர்த்திய திருக்கோலத்தில், தமது திருப்பெயருக்கேற்ப அழகிய வடிவில் சாந்தம் தவழும் திருமுகத்துடன் திரு அருட்காட்சியளிக்கிறார்.
திருமணம் கைகூடவும், கணவன் மனைவி கருத்தொற்றுமை மேலோங்கவும், தொழில் வளம் கூடவும்
பிரதி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று இத்தல ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு நடக்கும் சிறப்பு வழிபாடுகள்  இப்பகுதியில் வெகுபிரசித்தம்.
கருவறையின் முன் அமைந்துள்ள ஶ்ரீ லக்ஷ்மி வராஹர் திருவுருவச்சிற்பம் காண்பதற்கு அரிய சிறப்பு
ராமானுஜர் இத்தல இறைவனைத் தரிசனம் கண்டுள்ளார்.
இத்தலத்தின் அருகிலுள்ள எண்ணாயிரம் மலையில் 35-சமண படுகைகள் உள்ளன.
ராமானுஜர், இவ்வூரில் வாழ்ந்த  எண்ணாயிரம் சமணர்களை இந்து வைணவர்களாக மாற்றினாராம்.
அதனாலேயே இத்தல ஊர் எண்ணாயிரம் என்றிழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சுமார் நான்கு அடி உயரமுள்ள பீடத்தின் மீது கருங்கல் கட்டுமானமாக இந்த ஆலயம் மிகப் பிரமாண்டமாகத் திகழ்கிறது.