சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகை வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் 6 பகுதி அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகை வரை விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாகவும் வண்டலூா் அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் 88.52 ஏக்கா் பரப்பளவில் 60 ஆயிரத்து 452 சதுர அடி பரப்பில் ரூ.400 கோடியில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த பேருந்து நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் முழுமைப்பெற்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் 30ந்தேதி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, இன்றுமுதல் (டிசம்பர் 31) அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இங்கிருந்து நாள்தோறும் 2 ஆயிரத்து 310 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மேலும் பொங்கல் முதல் முழுமையாக செயல்பாட்டு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தென்மாவட்டங்களுக்கான விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படுவதால், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு பயணிகள் வந்து செல்ல ஏதுவாக புதிய வழித்தடங்களிலும், ஏற்கெனவே உள்ள வழித்தடங்களிலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை வரை விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பொங்கலுக்கு பிறகு அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.