அறிவோம் தாவரங்களை – உருளைக்கிழங்கு செடி

உருளைக்கிழங்கு செடி. (Solanum tuberosum).

‘பெரு’நாடு உன் தாயகம் பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு செடி நீ!

உலகில் (அரிசி, கோதுமை, சோளம்)  4 ஆவதாக அதிகம் பயிரிடப்படும் கிழங்கு செடி நீ!

1536இல் ஐரோப்பாவில் அறிமுகமான  செடி  நீ!

சுமார் நூறுவகை கொண்ட நூதன கிழங்கு செடி நீ!

சீனா, இந்தியா நாடுகளில் அதிகம் பயிரிடப்படும் சிறப்பு செடி நீ !

தோல் பளபளப்பு, மலச்சிக்கல், சிறுநீரகக் கல், வயிற்றுப்புண், தாய்ப்பால் சுரப்பு, அஜீரணம், இதய நலம், கொழுப்புக் குறைப்பு, ஸ்கர்வி நோய், உயர் ரத்த அழுத்தம், மூளை வளர்ச்சி,புற்றுநோய், உடல் எடை குறைப்பு, ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

சிப்ஸ், குருமா, பொரியல்,வறுவல், கிரேவி, குழம்பு, சாறு எனப் பல்வகையில்  பயன்படும் நல்வகை கிழங்கு செடி நீ!

கார்போஹைட்ரேட் சத்து மிகுந்த கிழங்கு செடியே!

120 நாட்களில் பலன் தரும் நூதன செடியே!

ஹெக்டேருக்கு 20 டன் வரை கிழங்கு கொடுக்கும் பணப்பயிரே!

தக்காளிச்செடி போன்ற தளதள செடியே!

கத்திரிப்பூ நிறத்தில் பூப்பூக்கும் கற்பகமே!

குளிர்கால பயிரே! வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அழகு செடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க!உயர்க!

நன்றி :  பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

☎️9443405050