அறிவோம் தாவரங்களை – மிளகாய்

Must read

அறிவோம் தாவரங்களை – மிளகாய்

மிளகாய் (Capsicum annuum)

தென் அமெரிக்கா உன் தாயகம்!

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வணிகச் செடி! 5 அடி வரை உயரம் வளரும் செடி மிளகாய்!

50,000 ரகங்கள் கொண்ட அதிசயக் காய்ச்செடி!

200 கி. வரை அதிக எடை கொண்ட குடைமிளகாய்!

சிவப்பு, மஞ்சள், வெள்ளை,பச்சை, ஊதா, கருப்பு, எனப் பல வண்ணங்களில் மின்னும் பஜ்ஜிக் காய்!

உலகில் அதிக காரம் கொண்ட அசாம் நாட்டின் கரோலினா ரிப்பர் (Corolina Reaper) காய்ச்செடி!

அமெரிக்க நாட்டு இன்கா நகர மக்களின் கல்லறையில் காணப்படும் படம் காய்!

ஒரு ஆரஞ்சு/எலுமிச்சையை விட 5.5 மடங்கு ‘சி’ வைட்டமின் கொண்ட மிளகாய்!

செரிமானம், இதய நலம், சர்க்கரை நோய்,தலை முடி உதிர்தல், தொற்று நோய்,  தோல் நோய்,    உடல் வலி, தலைவலி ஆகியவற்றை நீக்கும் மூலிகைக்  காய்!

உலகில் ஆண்டிற்கு 7 மில்லியன் டன் விளையும் பணப்பயிர் நீ!

நெய் வாசம் நிறைந்த காய்ச்செடியே!

ஆந்திராவின்’பண்டு மிரப்பா’காரப் பச்சடியேமிளகாய்ப் பொடி, சட்னி,ஊறுகாய், வத்தல், பச்சடி எனப் பல வகையில் பயன்படும் நல்வகைக் காயே!

நிழலில் வளர்ந்து இரவில் பூக்கும் அழகே!

இனிப்பும் உரைப்பும் கொடுக்கும் சிவப்புக் காயே!

மானிடரின் திருஷ்டி கழிக்க உப்புடன்  சேர்ந்து உடன்கட்டை ஏறி எரிந்து மடியும்  சிகப்புக் காயே!வீடுகளுக்கு அழகு சேர்க்கும் அலங்காரச்  செடியே!

பாதி உலகை வலம் வரும் காரக் காய்ச்செடியே!

வாழ்க்கையில்  “உப்பும் உரைப்பும்  ஒன்றுமே இல்லையே” என்ற விரக்தி வசனத்தின் நாயகனே!  சமையல் கட்டின் ஆதிக்க அதிபதியே!

நீவிர் இமயமும்  குமரியும் உள்ளவரை இனிதாய் ழகாய் வாழியவே!

–  Prof.Dr. S.Thiyagarajan

NeyveliTownship.

📞9443405050.

 

More articles

Latest article