அறிவோம் தாவரங்களை – முட்டைக்கோசு

முட்டைக்கோசு (Brassica oleracea var.capitata)

நடுநிலக்கடல், சீனா உன் தாயகம்!

6000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய உணவு கீரை நீ!

உன் இன்னொரு பெயர் முட்டை கோவா!

மனிதர்கள் முதன்முதலில் பயிரிட்ட கீரைகளில் நீயும் ஒன்று!

சீனா, இந்தியா, உருசியா நாடுகளில் அதிகம் பயிரிடப்படும் அழகுக்கீரை நீ!

கிரேக்கர்களுக்கும் ரோமானியர்களுக்கும் விருப்பமான உணவு நீ!

வழுக்கையை போக்கச் சீனர்கள் பயன்படுத்தும் சீனிக்கீரை நீ!

கண் பார்வை, அஜீரணம், சிறுநீரகக் கோளாறு, நரம்பு தளர்ச்சி, உடல் பளபளப்பு, எலும்பு வலிமை,பல் வலி ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

பொரியல், குழம்பு, சட்னி எனப் பல வகையில் பயன்படும் நல்வகை கீரை நீ!

சி.வைட்டமின் சத்து நிறைந்த பசுமை கீரையே!

நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும் பெரிய இலை கீரையே!

அடுக்கடுக்காக இலைகளைக் கொண்ட அழகு கீரையே!

குறுகிய தண்டு கொண்ட நறுங்கீரையே!

குளிர்காலத்தின் இலைப்பயிரே!

75 நாட்களில் பலன் கொடுக்கும் இனிய கீரையே!

ஒரு ஹெக்டேருக்கு எண்பது டன்.இலை கொடுக்கும் இனிய கீரையே!

மாடித் தோட்டத்தில் வளரும் மகிமை கீரையே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!

நன்றி :  பேரா.முனைவர்.  ச.தியாகராஜன்

 நெய்வேலி

📱9443405050.