அறிவோம் தாவரங்களை – வெள்ளரி

வெள்ளரி (Cucumis sativus)

தெற்கு ஆசியாவில் இருந்து வந்த  செடித்தாவரம்!

சீனாவை மணந்து கொண்டு ஏராளக் குழந்தை பெறும் படர்கொடிக்காய்!

3000 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பச்சைக்காய்!

இங்கிலாந்து, கிரேக்கம் என எங்கும் குடியிருக்கும்  மஞ்சள் பூ நிறத்தழகி!

உடல் வெப்பம் போக்கி உள்ளத்தை மகிழ வைக்கும் குளிர்ச்சிக் காய்!

வெய்யிலுக்குப் பிஞ்சு  தருவாய்!

குழம்புக்குக் காய் கொடுப்பாய்!

பசி போக்க பழம் தருவாய்!

பச்சடிக்கும் பயன்படுவாய்!

பழைய சோறு திண்பதற்குச் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்!

ஏழை விவசாயிகள் காசு பார்க்க விளையும் கோடை பயிர்!

வாதநோய் தீர்க்கும் மருந்துக்காய்!

வயிற்றுப்புண்ணைப் போக்கும் நீர்க்காய்!

முடி வளரவும் முகம் அழகுறவும் செய்யும் விதைக்காய்!

குடும்பத்தை குளிர வைக்கும் அமுதே!

குழந்தையும் விரும்பி உண்ணும் கனியே!

நீவிர் கொம்புத்தேன் தமிழ்வாக்கு உள்ளவரை,கொடி நீண்டு குலம் சிறந்து வாழியவே!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST).

நெய்வேலி.

📱9443405050.