அறிவோம் தாவரங்களை – கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை. (Cicer arietinum)

களிமண் பகுதியில் வளரும் பருப்பு வகைச் செடி நீ!

பாரதம், துருக்கி, பாகிஸ்தான், வங்கதேசம், மெக்சிகோ, ஈரான் நாடுகளில் அதிகம் பயிரிடப்படும் அற்புதச் செடி நீ!

ஹிந்தியில் நீ ‘சன்னா’!

கருப்புக் கொண்டைக்கடலை, வெள்ளைக் கொண்டைக்கடலை என இருவகையில் விளங்கும் இனிய பயிர் செடி நீ!

சிறுநீரகக் கோளாறு, மாரடைப்பு, நீரிழிவு நோய், ரத்தசோகை, செரிமானக் கோளாறு, வயிற்றுப் போக்கு, வயிற்று மந்தம், வாந்தி, சீதக்கழிச்சல் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

புட்டு, முறுக்கு, தட்டை, லட்டு, வடை, அடை, பொட்டுக்கடலை, பொரிகடலை, உப்புக்கடலை, பஜ்ஜி எனப் பல்வேறு வகையில் பயன்படும் நல்வகைப் பயிர் செடியே!

குளியலுக்குப் பயன்படும் மாவு பயிர் செடியே!

பாலுணர்வைத் தூண்டும் கொண்டைக்கடலைச் செடியே!

90  நாட்களில் அறுவடைக்கு வரும் அழகு செடியே!

பழுப்பு நிறத்திலும் கருப்பு நிறத்திலும் காணப்படும் பருப்புச் செடி நீ!

ஆரோக்கியத்தைத் தரும் அமுதப் பயிர் செடியே!

பாரத நாட்டின் பாரம்பரிய உணவு செடியே!

இறைச்சிக்கு நிகரான புரதச்சத்து கொண்ட இனிய செடியே!

ஆன்மீகவாதிகளின் சைவ உணவுப் பருப்புச் செடியே!

சுவை மிகுந்த சுண்டல் தரும் பச்சைச் செடியே!

நீர் பல்லாண்டு காலம் வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர்.ச.தியாகராஜன்(VST)

📱9443405050.