அறிவோம் தாவரங்களை – கேழ்வரகு

கேழ்வரகு (Eleusine coracana)

ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா உன் தாயகம்!

4000 ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் வந்தடைந்த பசுமைப் பயிர் நீ !

சீனா, ஜப்பான் நாடுகளில் அதிகம் பயிரிடப்படும் அற்புதப் பயிர் நீ!

ஆரியம் ,ராகி, கேப்பை, நச்சினி ,மண்டுவா எனப் பல்வகைப் பெயர்களில் பரிணமிக்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ!

நீரிழிவு நோய், உடல் உஷ்ணம், உடல் எடை குறைவு ,எலும்பு வலிமை, மூட்டுவலி, முட்டிவலி, தாய்ப்பால் பெருக்கம், தலைவலி, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா, உடல் சோர்வு நோய், ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

அடை ,கூழ், ரொட்டி, களி, குரக்கன், பிட்டு, தோசை, கஞ்சி எனப் பல வகையில் பயன்படும் நலமிகு தானியப் பயிர் நீ!

வெப்ப மண்டலங்களில் வளரும் வினோதப் பயிரே!

நார்ச்சத்து மிகுந்த நலமிகு தானியப் பயிரே!

கால்சியம் நிறைந்த கற்பகப் பயிரே!

மன அழுத்தத்தைக் குறைக்கும் மருத்துவப்பயிரே!

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற அற்புத உணவு தானியப் பயிரே!

ஏழைகளின் வரப்பிரசாதமே!

பாரதத்தின் பாரம்பரியமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி

📱9443405050.