டில்லி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் விவரங்களின் சுருக்கம் இதோ

இந்தியப் பொருளாதாரம் சரிந்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72 ஆகக் குறைந்துள்ளது.

இந்நிலை தொடர்ந்து நீடித்தால் இந்தியப் பொருளாதாரம் மேலும் சரிவை சந்திக்கும் எனவும் தொழிலதிபர்கள் நிறுவனங்களை மூடும் நிலை ஏற்படும் எனவும் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்த பொருளாதார சரிவால் தற்போது வாகன உற்பத்தித் துறை கடுமையாக முடங்கி பலர் பணி இழந்து வருகின்றனர்.

இன்று நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.

அந்த சந்திப்பில் அவர், “இந்தியாவில் தற்போது ஜிடிபி 3.2% ஆக உள்ளது. பொருளாதார மந்த நிலை உலகெங்கும் நிலவி வரும் போதும் இந்தியாவின் நிலை மிகவும் நன்றாக உள்ளது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இந்த சரிவைச் சந்தித்து வருகிறது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் உள்ளன.

இனி அனைத்து வரி சம்பந்தப்பட்ட நோட்டிஸ்களும் ஒரே ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் அளிக்கப்படும். ஏற்கனவே  அளிக்கப்பட்ட நோட்டிஸ்கள் அனைத்தும் இந்த ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கொண்டு வரப்படும்.

இப்போதுள்ள நிலையில் இந்தியா பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. வெளிநாட்டு முதலீடுகளுக்கு இனி சர்சார்ஜ் எனப்படும்  கூடுதல் வரி விதிக்கப்பட மாட்டாது. இதே சலுகை உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் அளிக்கப்படும்.

அரசு ரூ, 70000 கோடி ரூபாயை பொதுத் துறை வங்கிகளுக்கு அளிக்க உள்ளது. அதன் மூலம் வங்கிகள் ரூ, 50 லட்சம் கோடி பணப்புழகக்தை சந்தையில் வெளியிட உதவும். இனி வங்கிகள் ரெப்போ வட்டி விகிதம் அல்லது வெளிப்புறக் கடன்  திட்டங்களுக்கான விகிதத்தை இனி அறிவிக்கும்.

இனி வங்கிகள் குறைந்த வட்டியுடன் வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன்கள்  வழங்கும்.

மார்ச் 2020 வரை வாங்கப்படும் பிஎஸ்4 எஞ்சின்கள் பொருத்தப்பட வாகனங்கள் பதிவு முடியும் முழுக் காலம் வரை இயக்கத்தில் இருக்கும். இனி மின்சார வாகன  மற்றும் பெட்ரோல் டீசல் வாகனங்கள் இரண்டுமே பதிவு செய்யப்படும்.

இப்போது முதல் வரும் 2020 மார்ச் வரை வாங்கப்படும்  அனைத்து வாகனங்களுக்குக் கூடுதல் தேய்மான சலுகை 15% அளிக்கப்படும்.மொத்த தேய்மானம் 30% ஆக இருக்கும்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டள்ர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல்  வரிச்சலுகை இந்த வருடம் முழுவதும் இருக்கும்.

அடுத்த வாரங்களில் மேலும் இரு புதிய அறிவிப்புக்கள் வர உள்ளன”

என அறிவித்துள்ளார்.