வுகாத்தி

சாம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரியும் அவர் மனைவியும் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் பல வெளிநாட்டினர் ஊடுருவி உள்ளதாகக் கூறப்படுவதால்  அங்குள்ள மக்களின் தாய் நாடு குறித்து குடியுரிமை தீர்ப்பாயம் ஆய்வு செய்து வருகிறது. கடந்த 1962 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட எல்லாப்படையின் உதவியைக் கொண்டு இந்தப் பணி நடந்து வருகிறது. இந்த எல்லாப்படையைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் தகவலைக் கொண்டு மக்களின் தாய் நாடு குறித்து தீர்ப்பாயம் உத்தரவு அளித்து வருகிறது.

சாம் மாநிலத்தில் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள உதேப்பூர் என்னும் ஊரி அசாம்  மற்றும் நாகாலாந்து எல்லையில் அமைந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான் என்பவர் எல்லைப் பாதுகாப்புப் படை காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு இந்து சொந்தமான நிலம் குறித்த ஆவணங்கள் கடந்த 1923 முதல் உள்ளது. ஆயினும் தீர்ப்பாயம் முஜிபுர் ரகுமான் மற்றும் அவர் மனைவி ஆகியோரை வெளிநாட்டவர் என அறிவித்துள்ளது.

ஆனால் முஜிபுர் ரகுமானின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் இந்தியர்கள் என  அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பணி புரிந்து வரும் ரகுமானுக்கு இதுகுறித்த விவரம் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்த போது தெரிந்துள்ளது. இந்த முடிவுக்குக் காரணம் எல்லைப் படையைச் சேர்ந்த ஒருவர் குடிபோதையில் தவறுதலாக அளித்த தகவலின் பேரில் இவ்வாறு அறிவிக்கப்பட்டதாகக் கூறி உள்ளார்.

இது குறித்து ரகுமான் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளார்.