ண்டன்

பிரிட்டன் புதிய அமைச்சரவையில் மூன்று இந்திய வம்சாவழியினர் இடம் பெற்றுள்ளனர்.

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பதவி ஏற்றுள்ள போரிஸ் ஜான்சன் தமது அமைச்சரவையில் மூன்று இந்திய வம்சாவழியினரை அமைச்சர்களாக நியமித்துள்ளார்.  கருவூல தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனாக், சர்வதேச உறவு மேம்பாட்டு செயலாராக நியமிக்கப்பட்டுள்ள அலோக் சர்மா மற்றும் உள்துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள பிரீதி படேல் ஆகியோர் ஆவார்கள்.

அவர்களைப் பற்றிய விவரங்கள் இதோ

இந்தியாவின் பிரபல நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவன அமைப்பாளர் மருமகன் ரிஷி சுனாக்.  இவர் வடக்கு யார்க்‌ஷைரில் உள்ள ரிச்மாண்ட் தொகுதி மக்களவை உறுப்பினராகக் கடந்த 2015 மற்றும் 2017 ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.  இவர் ஏற்கனவே முந்தைய பிரதமர் தெரசா மே அமைச்சரவையில்  பணி புரிந்துள்ளார்.

பிரிட்டனில் பிறந்த ரிஷி சுனாக் தந்தை ஒரு மருத்துவர் மற்றும் தாய் ஒரு மருந்தாளுநர் ஆவார்கள்.  ரிஷி ஆக்ஸ்போர்ட் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பயின்றவர் ஆவார்   இவர் மனைவி இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதா ஆவார்.  இவருக்கு கிருஷ்ணா, அனுஷ்கா என இரு மகள்கள் உள்ளனர்.

சர்வதேச முன்னேற்றச் செயலராகப் பதவி ஏற்றுள்ள 51 வயதான அலோக சர்மா இந்தியாவில் பிறந்தவர் ஆவார்.  51 வயதாகும் அலோக் முன்பு வேலைவாய்ப்புத் துறையில் அமைச்சராகப் பணி புரிந்துள்ளார்.  இவர் நிதிநிலை அறிக்கை தயாரிப்பிலும் பங்கு பெற உள்ளார்,  இவர் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.   இவர் போரிக் ஜான்சன் கட்சித தலைவர் தேர்தலில் வெற்றி பெற பெரிதும் உதவியுள்ளார்.

உள்துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள பிரிதி படேல்  பாதுகாப்பு, குடிபெயர்தல், மற்றும் விசா வழங்குதலுக்கு பொறுப்பு ஏற்கிறார்.   இவர் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவர் ஆவார்.   இவர் பிரிட்டனின் பொருளாதாரம் குறித்துப் பல ஆய்வுகள் நடத்தி புகழ் பெற்றுள்ள்ளார்.