மலிங்கா விலகினாலும் பலப்பட்டுள்ள மும்பை அணியின் பந்துவீச்சு!

Must read

ஷார்ஜா: இந்த ஐபிஎல் தொடரில், மும்பை அணியில், பும்ரா, பேட்டிசன் மற்றும் டிரென்ட் பெளல்ட் என்று வலுவான வேகப்பந்து கூட்டணி உருவாகியுள்ளது.

அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா விலகிய நிலையில், பந்துவீச்சு பலம் குறைந்துவிடுமோ என்று கருதப்பட்ட நிலையில், தற்போது வலுவான ஒரு வேகப்பந்து அணியைக் கொண்டதாக உள்ளது மும்பை அணி என்கிறார்கள் கிரிக்கெட் பார்வையாளர்கள்.

மும்பை அணியின் டிவிட்டர் செய்தியில், ‘பேட்டிசன் அணியில் இணைந்துள்ளார்; பும்ரா & பெளல்ட்டுடன் இணைந்து மிரட்ட காத்திருக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.

“சர்வதேச அரங்கில் சிறந்த பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் பெளல்ட்டுடன் இணைந்து மும்பை அணியில் செயல்படுவதானது எனக்கு ஸ்பெஷலான ஒன்று” என்றுள்ளார் பேட்டிசன்.

More articles

Latest article