சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சில இடங்களில்  கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்து உள்ளது.

மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றுஅதி காலை முதலே கனமழை பெய்து வருகின்றது. வானம் மேகமூட்டமாக இருந்து வருகிறது. விட்டு விட்டு பெய்து வருத் மழை காரணமாக  தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சென்னை முழுவதும் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு, வடபழனி,  திருவல்லிக்கேணி,கிண்டி, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், சேப்பாக்கம், அடையாறு, கிரீன்வேஸ் சாலை, அண்ணாசாலை, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, திருவான்மியூர், பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, கோட்டூர்புரம், ராமாபுரம், எழும்பூர், பெரம்பூர், மூலக்கடை, மாதம் உள்பட அனைத்து   பகுதிகளிலும்  காலையிலிருந்தே கனமழை பெய்து வருகின்றது.

இநத நிலையில்,  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே  தமிழகத்தில், சேலம், தர்மபுரி, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதேபோல், ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது  உருவாகி உள்ள  புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மேலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.