காரைக்கால்: கொரோனா பரவலால் மதக்கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அலவலகம் முன்பு ஜெபக்கூட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியில் நடைபெற்றுள்ளது. இது சலசலப்பைஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ஞாயிறு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில், முழு ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை. ஆனால், மக்கள் கூடுவதை தடுக்க கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
இந்த நி லையில், காரைக்காலை அடுத்துள்ள நடுஓடுதுறை என்னுமிடத்தில் கிறிஸ்தவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மதக்கூட்டம் நடத்தி, கூட்டுப் பிரார்த்தனை செய்ய முயற்சி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்தறையினர், கூட்டம் கூடுவதற்கு அனுமதி மறுத்து அவர்களை கலைந்துசெல்ல வலியுறுத்தினர். ஆனால், பலர் வெளியேற மறுத்த நிலையில், அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினார்கள்.
இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கிறிஸ்தவர்கள் வெளியேற்றப்பட்ட தகவல் கிடைத்த பல கிறிஸ்தவர்கள் அங்கு கூடத்தொடங்கினர். இதனால் காவலர் களும் அதிகரிக்கப்பட்டு, அந்த பகுதிக்கு யாரும் வராதவாறு தடுத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து நீதி கேட்கப்போவதாக ஒரு கும்பல் ஆட்சியர் அலுவலகம் வந்தனர். ஆனால், அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடுவீதியில் அமர்ந்து வழிபாடு நடத்தினார்கள்.
இந்த சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், அதை மீறி கிறிஸ்தவர்கள் கூட்டம் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.