டெங்கு: வருமுன் காப்பது எப்படி.. வந்தபின் தப்பிப்பது எப்படி?

Must read

சென்னை,

மிழகத்தில் தற்போது பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி மக்களை பீதியடைய வைத்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டெங்கு காய்ச்சலின் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி..

இது குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பது என்ன?

டெங்கு காய்ச்சல்  என்றால் என்ன? எப்படி பரவுகிறது?

”டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி. இது கொசு மூலமே பரவுகிறது. அதுவும் நன்னீர் கொசுவான   ‘ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) என்ற வகையை சேர்ந்த கொசுவால்  பரவுகிறது.

இந்த டெங்கு கொசுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதுவே டெங்கு காய்ச்சல் எனப்படுகிறது. இந்த கொசுவானது, டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்து விட்டு, பின்னர் மற்றொருவரை கடிக்கும்போது அவருக்கும் டெங்கு பரவுகிறது.

மேலும், நாம் நினைப்பதுபோல,  , காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவாது. அதுபோல மனிதனிடம் இருந்து மனிதனுக்கு  நேரடியாகப் பரவாது.

டெங்கு  காய்ச்சலை பரப்பும்  ‘ஏடிஸ் எஜிப்டி’ கொசு, நன்னீரில் முட்டையிடும். இந்த  முட்டை யானது சுமார் 300 நாட்கள் வரை அழியாமல் அப்படியே இருக்கும். வெயில் காரணமாக தண்ணீர் வற்றி மீண்டும் மழை பெய்யும்போது, கொசு முட்டை மீண்டும் தண்ணீரில் மூழ்கும்போது, அந்த முட்டைகள் மீண்டும் உயிர்பெற்று வளர்ந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது.

எனவேதான் அரசும், சுகாதாரத்துறையும், மறைவான இடங்களில் தண்ணீர் தேங்காதவாறு பாதுகாத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.

டெங்கு பாதிப்பின் அறிகுறிகள் என்ன?

டெங்கு பாதிப்பில் உருவாகும்  ”காய்ச்சல் 104 டிகிரி”  வரை இருக்கும். அத்துடன் அவர்களுக்கு தலைவலி, சோர்வு, உடல்வலி, கண்வலி, வாந்தி, போன்ற பல்வேறு வகையான தொல்லைகள் ஏற்படும்.

இதுபோன்ற அறிகுறிகள் இல்லாமலும்  டெங்கு  இருக்குமா?

இருக்கும். சுமார் ஒரு வாரம் கழித்தும் அதற்கான அறிகுறிகள் தெரியும். ஆரம்பத்தில் டெங்கு கொசுவால் பாதிக்கப்பட்ட நபரில் உடலில் நோய்க்கிருமி பரவி பெருகும். அதன்பிறகே அதற்கான அறிகுறிகள் தெரிய வரும்.

டெங்குவை கவனிக்காமல்விட்டால் என்ன ஆகும்?

டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால், ஏழு நாட்களில் சரியாகிவிடும் என்பது கணிப்பு. ஆனால், சரியான சிகிச்சை எடுக்காவிட்டால் அதன் காரணமாக மரணத்தை தழுவும் சூழலும் ஏற்படும்.. டெங்கு கொசுவால் பாதிக்கப்பட்டவரின் உடலில், நோய் தோற்று  வைரஸ் ரத்தத்தில் புகுந்த நோய் எதிர்ப்பு சக்தி அணுக்களை அளித்து விடும். குறிப்பாக ரத்தத்தை உறைய வைக்கும் ரத்தத் தட்டு அணுக்களை அழித்துவிடும்.

இந்த  ரத்தத் தட்டுக்கள் எண்ணிக்கை குறையும்போது பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். பின்னர்  அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

டெங்கு  வராமல் தடுக்க தடுப்பு ஊசி, மருந்து ஏதேனும் இருக்கின்றனவா?

டெங்குவை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை தொடர்ந்து எடுத்தால் மட்டுமே  கட்டுப்படுத்த முடியும். இதற்கான தனி  ஊசி, மருந்து எதுவும் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

டெங்குவால் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது?

டெங்கு காய்ச்சல் என்பது சோதனை முறையில் தெரிய வந்தால், அவர்களுக்கு காய்ச்சலுக்கான மருந்தே கொடுக்கப்படுகிறது. தனியாக எந்தவொரு சிகிச்சையும் கிடையாது.  ஆனால், தொடர் மருத்துவ சிகிச்சை காரணமாக டெங்குவை கட்டுப்படுத்தலாம்.

டெங்கு பாதிக்கப்பட்ட நபரின்,  ரத்தத்தில் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறையாமல் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருவரது உடலில் குறைந்தது ஒன்றரை லட்சம் ரத்தத்தட்டுகள்  இருக்க வேண்டும். ஆனால், டெங்கு வைரஸ் கிருமி அவற்றை கடுமை யாக தாக்கினால், அவற்றின் அளவு மிகவும் குறைந்துவிடும். இதை கண்காணித்து, அதற்கு தேவையான சிகிச்சை மற்றும்  ரத்தம் செலுத்துதல் அல்லது ரத்தத் தட்டு அணுக்கள் செலுத்துதல் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.

இதன் காரணமாக அவர்களின் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், உயிரிழப்பை தடுக்கவும் முடியும்.

டெங்கு  ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் ‘உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும். அதற்கான சோதனையான  ஐ.ஜி.எம். எலிசா, பி.சி.ஆர். ஆகியப் பரிசோதனைகள் செய்யப்படும்.

டெங்குவால்  பாதிப்பு இருப்பது உறுதியானால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தவறாது சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நன்றாக ஓய்வெடுத்து, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

டெங்கு பாதிப்பு காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டும்.

டெங்கு  எத்தனை  நாட்கள் இருக்கும்?

‘பொதுவாக டெங்கு காய்ச்சல்  ஏழு நாட்களில் சரியாகிவிடும். ஆனால் டெங்குவால் பாதிப்புக்குள்ளானவர்கள் முழு நலம் பெற்று சகஜமாக வர குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

வருமுன் காக்க  என்ன செய்ய வேண்டும்?

நாம் வசிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பதே முதல் பாதுகாப்பு. தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால், வீட்டை சுற்றி உள்ள பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறு  பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நன்னீரில் முட்டை இட்டு  டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி’ வாய்ப்பு இல்லாதவாறு சுகாதாரமாகச சுற்றுச்சூழலைப் பராமரிக்க வேண்டியது கட்டாயம்.

மேலும், வீட்டினுள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசு வலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச்சீலைகளைப் பயன்படுத்தியும்,  கொசு கொசுவத்தி, கொசு விரட்டி, ஸ்பிரே போன்றவை பயன்படுத்தி கொசு பரவுவதை தவிர்க்கலாம்.

மேலே கண்ட தகவல்கள்படி நாமும், நமது சுற்றுப்புரமும் சுகாதாரமாக இருந்தால் டெங்குவை

More articles

Latest article