டெங்கு காய்ச்சல்: இன்று முதல் அம்மா உணவகங்களில் நிலவேம்பு குடிநீர்!

Must read

 
சென்னை:
மிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை அடுத்து நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 7 பேர் இறந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் டெங்கு காய்ச்சல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக சித்த மருத்துவ முறையான நிலவேம்பு குடிநீர், பொதுமக்கள் கூடும் இடங்களில் வழங்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இன்று முதல் சென்னையில் உள்ள 300 அம்மா உணவகங்களிலும் நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்படும் என்று  சுகாதார அதிகாரி டாக்டர் செந்தில் குமரன் கூறினார்.
மேலும், அம்மா உணவகங்கள் தவிர்த்து, 136 மாநகராட்சி சுகாதார மையங்களிலும் பொது மக்களுக்கு வேலை நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொருவருக்கும் 30 மில்லி அளவு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும்.
nilavmebu
பொதுமக்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு இதனை குடித்தால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாது. இதுபோல மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article