டில்லி,

நாட்டில், பண மதிப்பை நீக்கியது, மோடியின் சிந்தனையற்ற செயல் என்று  ராகுல்காந்தி கடுமையாக தாக்கி டுவிட் செய்துள்ளார்.

மேலும், பண மதிப்பிழிப்பு  இந்தியாவை காயப்படுத்தியுள்ளது மற்றும் நமது பொருளாதாரத்துக்கு ‘பக்கவாதத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறி உள்ளார்.

பண மதிப்பிழப்பு  அறிவித்து ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில்,   எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் இன்று கருப்பு தினமாக அறிவித்து உள்ளனர். தமிழகத்தில், இன்றைய தினத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கறுப்பு தினமாக அனுசரித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

ஆனால், அதே நேரத்தில் இன்றைய தினத்தை கறுப்பு பண ஒழிப்பு தினமாக மத்திய பாஜக அரசு சார்பில் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் பண மதிப்பிழப்பு குறித்து அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 பணமதிப்பிழப்பு என்று அறிவித்தது மிகப்பெரிய பேரிடர் சம்பவமாகும். பிரதமரின் சிந்தனையற்ற செயலால் இது அமல்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான மக்களின் வாழ்வும், வாழ்வாதாரங்களும் அழிந்துள்ளது. அத்தகைய மக்களின் பக்கத்தில் அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் நிற்கும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், பண மதிப்பிழப்பு காரணமாக இந்திய பொருளாதாரம் பக்கவாதத்தால் தாக்கப்பட்டுள்ளது என்றும் கூறி உள்ளார்.

 பண மழிப்பு நீக்க நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் இருந்தே மிகக்கடுமையாக எதிர்த்து வருகிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கை இந்தியாவின் பொருளாதாரத்தை நொறுங்க செய்து விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

இவ்வாறு ராகுல்காந்தி டுவிட்டரில் கூறி உள்ளார்.