டெல்லி:

ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் இருந்த போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனால், இந்த ரூபாய் நோட்டுக்களில் தற்போதுள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம்பெற்றிருப்பது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய 500 ரூபாய் அச்சடிக்கும் முடிவும் நவம்பர் 23ம் தேதி தான் எடுக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாகி மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி வந்த நிலையில், 2 வாரங்கள் கழித்து தான் இந்த முடிவு மிகவும் தாமதமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 2 அச்சகங்களில் விசாரிக்கப்பட்டது.

இந்த விசாரணையின் மூலம், ஆகஸ்ட் 22ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கு உர்ஜித் படேலின் பெயர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இவர் செப்டம்பர் 4ம் தேதி தான் பொறுப்பேற்றார். ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியான இரண்டு தினங்களில் புதிய ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அப்போது பதவியில் இருந்த ரகுராம் ராஜன் கையெழுத்து ஏன் 2,000 ரூபாய் நோட்டில் இடம்பெறவில்லை என்று கேள்வி எழுப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 7ம் தேதி தான் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க முடிவு செய்ததாக நாடாளுமன்ற குழுவிற்கு ரிசர்வ் வங்கி கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு எடுக்கப்பட்டு 2 மாதங்கள் கழித்து தான் ஆகஸ்ட் 22ம் தேதி தான் அச்சடிக்கும் தொடங்கியுள்ளது. அப்போது பதவியில் இருந்தவர் ரகுராம் ராஜன்.

‘‘ரூபாய் நோட்டில் முதலில் பாதுகாப்பு அம்சங்களை ரிசர்வ் வங்கி மாற்றிவிட்டு, அதன் பிறகு பாரதீய ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்ட அச்சடிப்பு நிர்வாக குழுவிடம் ஒப்புதல் பெற்றுள்ளது’’ என்று அதன் முன்னாள் உறுப்பினர் விபின் மாலிக் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாகி 100 நாட்களை கடந்துவிட்டது. இந்த நிலையிலும் இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது? எந்த விதமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டது? என்பது குறித்து வெளிப்படையான தகவல்களை அளிக்காமல் மத்திய அரசு மவுனம் சாதித்து வருவது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.