வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸ் மைனாரிட்டி பெண் உறுப்பினர்கள் நால்வர் குறித்து அதிபர் டிரம்ப் செய்த விமர்சனம் குறித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் செனட்டர் கமலா ஹாரிஸ்.
அவர் கூறியுள்ளதாவது, “காங்கிரஸ் மைனாரிட்டி பெண் உறுப்பினர்கள் குறித்து டிரம்ப் வெளியிட்ட மோசமான கருத்துகள் மிக மிக தரம் தாழ்ந்தவை. அவை அமெரிக்க தன்மைக்கே எதிரானவை. ஒரு அதிபரின் வாயிலிருந்து வரக்கூடாதவை.
அதிபர் பதவிக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டார் டிரம்ப். அவர் அந்தப் பதவியின் தரத்தை மிகவும் கீழான ஒரு நிலைக்கு கொண்டுசென்றுவிட்டார். இதுபோன்ற வார்த்தைகளை நாம் தெருவில் கேட்டிருப்போம். ஆனால், அதிபர் மாளிகையிலிருந்து கேட்டிருப்போமா?
டிரப்ம் எங்கிருந்து வந்தாரோ, அவர் அங்கேயே செல்ல வேண்டும். அவர் தனது பதவியிலிருந்து விலக வேண்டும். இதுபோன்ற அதிபர் இன்னொரு 4 ஆண்டுகள் ஆட்சி புரியக்கூடாது என்பதால்தான் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். தனது வாயில் எது வருகிறதோ, அதைப்பற்றி கொஞ்சமும் யோசிக்கால் பேசும் மனிதராக இருக்கிறார் இந்த அதிபர்” என்று கடுமையாக சாடியுள்ளார் கமலா ஹாரிஸ்.