புதுடெல்லி:
ந்திய ஜனநாயகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது; பொருளாதார மந்த நிலையும், பட்டியலினத்தவருக்கு எதிரான வன்முறைகளும் நாட்டில் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களின் கூட்டத்திற்கு, இடைக்கால தலைவர் சோனியா தலைமை தாங்கினார். அதில் பா.ஜ., தலைமையிலான மத்திய அரசை அவர் கடுமையாக தாக்கி பேசினார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் சோனியா பேசியதாவது: மக்களுக்கு சேவை செய்வதே கட்சியின் கொள்கை. இந்திய ஜனநாயகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குரல் அடக்கப்படுகிறது. பொருளாதார மந்த நிலையும், பட்டியலினத்தவருக்கு எதிரான வன்முறைகளும் நாட்டில் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முன்னதாக., காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூட்டம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டதாவது: நம் நாட்டின் ஜனநாயகம் மிகவும் கடினமான காலத்தை கடந்து வரும் இச்சூழலில், மக்களின் பிரச்னை, துன்பங்களை சரிசெய்ய உதவும்படி அனைவரிடமும் கூறினார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.