டில்லி

டில்லியின் இரு பெண்  முதல்வர்களான ஷீலா தீட்சித் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

டில்லி முதல்வராகத் தொடர்ந்து மூன்று முறை ஷீலா தீட்சித் பதவி வகித்துள்ளார். கடந்த 1988 முதல் 2013 வரை 15 வருடங்கள் டில்லி முதல்வராக அவர் பணி ஆற்றி உள்ளார். கடந்த 2013 அன் வர்ய்டன் அவர் தோல்வி அடைந்தார். அவருடைய ஆட்சியில் 2010 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச விளையாட்டுப் போட்டி குறிப்பிடத்தக்கதாகும்.

டில்லியின் இரண்டாவது பெண் முதல்வரான சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 1998 ஆம் ஆண்டு அக்டோபர் 13 முதல் 1998 ஆம் வருடம் டிசம்பர் 3 வரை மட்டுமே பதவி வகித்துள்ளார். மிகக் குறுகிய காலமே பதவி வகித்தாலும் டில்லியின் இரு பெண் முதல்வர்களில் இவரும் ஒருவர் என்னும் பெருமை அடைந்துள்ளார். டில்லியில் இதுவரை இரு பெண்கள் மட்டுமே முதல்வர் பதவி வகித்துள்ளனர்.

ஷீலா தீட்சித் தனது 81ஆம் வயதில் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவர் இறந்து சுமார் 3  வாரங்களில் சுஷ்மா ஸ்வராஜ் மரணம் அடைந்தார். நேற்று இரவு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். டில்லியின் இரு பெண் முதல்வர்களும் அடுத்தடுத்து மரணம் அடைந்த பரிதாப நிகழ்வு மக்கள் மனதில் கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.