டெல்லி : டெல்லி ஆம் ஆத்மி அரசில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக துணைமுதல்வர் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய மந்திரியாக ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் சவுரப் பர்த்வாஜ், ஆதிஷி பெயரை முதல்வர் கெஜ்ரிவால் கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி துணை மந்திரியுமான மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதுபோல, பல்வேறு குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சந்தேந்திர ஜெயினும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் நேற்று (பிப்ரவரி 28ந்தேதி) தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து, அதற்கான கடிதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தனர்.

இதை ஏற்ற முதலமைச்சர் கெஜ்ரிவால், புதிய அமைச்சர்களாக,  ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சவுரப் பர்த்வாஜ், ஆதிஷி இருவரையும் தேர்வு செய்துள்ளதார். இதற்கான ஒப்புதலை வழங்கி பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி மாநில ஆளுநருக்கு பரிதுரை கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த கடிதத்திற்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் அளித்து சவுரப் பர்த்வாஜ், ஆதிஷி இருவருக்கும் பதவி பிரமானம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.