சென்னை,

டில்லியில் 41 நாளாக போராடிய தமிழக விவசாயிகள், தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள, தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டு சென்னை திரும்பினார்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்ட அவர்கள்  இன்று காலை 7 மணியளவில் சென்னை சென்ரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தனர்.

டில்லியில் கடந்த 41 நாட்களாக போராடிய விவசாயிகள், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்வர் பழனிசாமி போராட்டத்தை விலக்கிக் கொள்ளும்படி பேச்சு நடத்தினார்.

அதை ஏற்று, மே 25 வரை போராட்டத்தை ஒத்திவைப்பதாக விவசாயிகள் அறிவித்தனர்.

அதைத்தொடர்ந்து போராடிய தமிக விவசாயிகள், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம், இன்று செவ்வாய்கிழமை (ஏப் 25) காலை 7 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.  அவர்களுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

சென்னை வந்த அய்யாக்கண்ணு கூறியதாவது,

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்க ளுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும்,   டில்லியில் போராட்டம் நடத்திய போது கொலை வழக்கு போடுவோம் என மிரட்டல்கள் வந்தன.

கோரிக்கைகளை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாக, பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.

தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவால் 15 நாட்களில் முடிவு சொல்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சாதகமான முடிவு கிடைக்காவிட்டால் மே 25 முதல் டில்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி பார்க்க மறுத்ததால்தான் அவரது அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டம் நடந்தது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், போலீசார், அங்க போராடி அனுமதியில்லை என்று கூறியதால், அங்கிருந்து நடந்த வந்து எழும்பூர் ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற திருநாவுக்கரசர், கீ.வீரமணி ஆகியோர் தலைமை யில் நடைபெற்று வந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.