காரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை

Must read

டெல்லி: காரில் பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சாலை பாதுகாப்பு மேம்பாடு, பொறுப்பான பயணத்தை ஊக்குவிக்கவும்  டெல்லி காவல்துறை கடந்த வாரம் ஒரு முக்கிய அறிவிப்பை அனுப்பியது. அதில், காரின் பின்புற இருக்கையில் உட்கார்ந்திருப்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இல்லாவிட்டால்அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் டெல்லி போலீசார் கூறி இருப்பதாவது: ஜனவரி 13ம் தேதி முதல் மேற்கு டெல்லியில் நடைமுறையில் உள்ள இந்த அறிவிப்பு  ஜனவரி 23 வரை தொடரும்.

இந்த அபராத நடைமுறை தலைநகரின் மேற்கு பிராந்தியங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இருப்பினும், மற்ற பகுதிகளுக்கும் இந்த நடைமுறையை விரிவுபடுத்த வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்,

More articles

Latest article