டெல்லி: மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது!

Must read

டில்லி,
டையை மீறி கண்மாய் கட்ட முயன்ற ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. ரிட்டுரோஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவால் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் கைது படலம் தொடர்கிறது.
வடமாநிலங்களில் பிரபலமாக கொண்டாப்படும் பூஜை ‘சாட் பூஜை’. சூரியபகவானையும், அவரது மனைவியை யும் வழிபாடு செய்யும், அறுவடைத் திருநாளான இந்த பூஜை மிகவும் பிரபலமானது.
இந்த மாதம் நடைபெற இருக்கும் சாட் பூஜையையொட்டி டெல்லி தயாராகி வருகிறது.

ரிட்டுராஜ் கோவிந்த்
ரிட்டுராஜ் கோவிந்த்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ரிட்டுராஜ் கோவிந்த் என்பவர் தனது தொகுதியான கிராரியில் உள்ள எக்ஸ்பிரஸ் ஹைவேயில் ஆற்றங்கரை ஓரத்தில் கண்மாய் ஒன்றை கட்ட முயன்றார். இதற்கு  அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அவருக்கும், அந்த பகுதி மக்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு அப்பகுதிக்குள் தடையைமீறி  நுழைய முயன்ற எம்.எல்.ஏ. ரிட்டுராஜ் கோவிந்தை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
சாத்பூஜை விழா நெருங்கும் நிலையில் பொதுஅமைதிக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டமைக்காக அவரை கைது செய்துள்ளதாக டெல்லி புறநகர் போலீஸ் துணை கமிஷனர் எம்.என்.திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இவருடன் சேர்த்து கடந்த சில மாதங்களில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள்  ஒவ்வொருவராக கைது செய்யப்படுவது மக்களிடையே ஆத்ஆத்மி மீது வெறுப்புகள் வளர தொடங்கி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

More articles

Latest article