டெல்லி: வங்கதேச போர் தொடர்பான டெல்லி நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பெயர் இடம்பெறவில்லை என ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரானது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது. அப்போது இந்திய பிரதமராக இந்திரா காந்தி இருந்து வந்தார். இரும்பு பெண்மணியான இந்திராவின் சாதுர்யத்தில்,  இப்போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா களமிறங்கியது.   இந்தியாவுடன் வங்காளதேச விடுதலை இராணுவம் இணைந்து போரிட்டு டிசம்பர் 16 அன்று வென்றறது. இதனால், வங்கதேசம் உருவாக்கப்பட்டது.

இந்த யுத்தத்தின் இறுதியில் பாகிஸ்தான் ராணுவம் தோல்வியைத் தழுவி சரணடைந்தது. பாகிஸ்தானின் 90,000 வீரர்கள், இந்திய ராணுவத்திடம் சரணடைந்த னர். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை, காளியின் வடிவமாக பார்ப்பதாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மறைந்த பாஜக தலைவர் வாஜ்பாய் புகழாரம் சூட்டினார்.

இதையொட்டி, விஜய் திவாஸ் என்ற பெயரில்,  வங்கதேச விடுதலைப் போரின் வெற்றி விழா டிசம்பர் 16-ந் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விஜய் திவாஸ் நிகழ்வின் 50வஆண்டு பொன்விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் விஜய் திவாஸ் நாளை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார். வங்கதேச போரின் வெற்றிக்கு காரணமாக இருந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில், இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக டேராடூனில் பேசிய ராகுல், வங்கதேச போர் தொடர்பான நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் இந்திரா காந்தி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த நாட்டிற்காக 32 தோட்டாக்களை  ஏற்று இன்னுயிரைக் கொடுத்த தியாகப் பெண்ணின் பெயர் அழைப்பிதழில் இல்லை,  ஏனெனில் இந்த அரசாங்கம் உண்மையைக் கண்டு பயப்படுகிறது என்று விமர்சித்துள்ளார்.