புதுடெல்லி: 2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை முன்னதாகவே விசாரிக்க முடியாது என்று கைவிரித்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம்.

இந்த மேல்முறையீட்டு மனு அக்டோபர் 24ம் தேதி விசாரிக்கப்படுவதாய் இருந்தது. ஆனால், அந்த மனுவை முன்கூட்டிய விசாரிக்க வேண்டுமென சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை நிரகாரித்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம்.

மனு மீதான விசாரணையில் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் விருப்பம். எனவே, ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட தேதியே பொருத்தமானது என்று நீதிமன்றம் கூறிவிட்டது.

2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, திருமதி.கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட 17க்கும் மேற்பட்டோர் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் மறைந்த கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள், வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, கரீம் மொரானி, சரத் குமார், பி.அமிர்தம் உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.