டில்லி

ணவன் குண்டாக இருப்பதால் அவரை குண்டு யானை என அழைத்த பெண்ணுக்கு அளிக்கப்பட்ட விவாகரத்தை டில்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கணவரின் கொடுமை தாளாமல் விவாகரத்து கோரும் மனைவிகள் அதிகரித்து வருகின்றனர்.    இவ்வாறு தொடரப்படும் வழக்குகளில் பல நேரங்களில்  மனைவியின் உருவத்தை குறித்து விமர்சனம், அடி, உதை ஆகியவகளை கணவர் அளிப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.    பல கணவர்கள் இது போல் செய்து வருகின்றனர்.   இதற்கு நேர்மாறாக ஒரு குடும்பத்தின் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரு நகரத்தில் ஒரு கணவனும் மனைவியும் வசித்து வந்தனர்.  (அந்தரங்கம் கருதி நகரம் மற்றும் தம்பதிகளின் பெயர் வெளியிடப்படவில்லை).  அந்த கணவர் மிகவும் குண்டாக இருந்துள்ளார்.   இதனால் இருவருக்கும் இடையில் தொடர்ந்து தகராறு இருந்து வந்துள்ளது.     தனது குண்டான உடல்வாகு காரணமாக மனைவியை பாலியல் ரீதியாக அவரால் திருப்தி படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

ஒரு முறை அவர் தனது மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பிய  போது மனைவி அவருடைய ஆணுறுப்பில் தாக்குதல் நடத்தி உள்ளார்.   தினமும் அவரை குண்டு யானை என அழைப்பதும் அதை அவர் எதிர்த்தால் அவரை அடித்து உதைப்பதுமாக இருந்த மனைவி அவரை குண்டு யானை எனவே அழைக்க தொடங்கி உள்ளார்.  இதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனைவி  தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்துக் கொள்ள முயன்றுள்ளார்.

இதை தடுத்த கணவரிடம் அவருடைய சொத்துக்களை தன் பேருக்கு மாற்றுமாறும் இல்லை எனில் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரை விடுவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துக் கொள்வேன் எனவும் மிரட்டி உள்ளார்.    இதனால் அந்த கணவர் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.   அவருக்கு விவாகரத்து அளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மனைவி டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.  அத்துடன் கணவரை தான் துன்புறுத்தியதாக கூறப்படும் தேதி மற்றும் நேரம் குறித்து எவ்வித ஆதாரமும் அளிக்கவில்லை என மேல் முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளார்.     இந்த வழக்கை நீதிபதி விபின் சங்கி விசாரணை செய்தார்.  கடந்த 2012 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த தீர்ப்பில், “கணவரை அவர் உருவம் காரணமாக குண்டு யானை என அழைப்பது மிகவும் தவறான செயலாகும்.   இது அவருடைய சுயமரியாதையை இழிவு படுத்துவதாகும்.  மேலும் குடும்ப வாழ்வில் என்றென்று சண்டை நடந்தது என்பதைப் போன்ற விவரங்களை குறித்து வைத்துக் கொள்ள முடியாது.   அது மட்டுமின்றி ஒரு முறை மனைவி தன் கணவனை வீட்டை விட்டு துரத்தி உள்ளார்.

மனைவி என்பவர் தனது நகைகளை எடுத்துச் சென்று தாய் வீட்டில் வைப்பது மற்றும் கணவரின் சொத்துக்களை மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன் என மிரட்டுவது போன்றவை திருமண பந்தத்துக்கு எதிரானதாகும்.  இந்த நிகழ்வுகளை மனைவி ஒப்புக் கொண்டுள்ளார்.   எனவே குடும்ப நீதிமன்றம் அளித்த  தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.