டில்லி
கடந்த 2020 ஆம் வருடம் சில இளைஞர்களை வற்புறுத்தி தேசிய கீதம் பாடவைத்து கலவரம் ஏற்படுத்தியது குறித்த வீடியோ பதிவுகளை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020 ஆண்டு நடந்த டில்லி கலவரம் தேசத்தையே உலுக்கியது. இந்த கலவரம் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்தது. அப்போது சில இளைஞர்களைக் கலவரக்காரர்கள் தேசிய கீதம் பாடச் சொன்னதாகவும் அதை அவர்கள் மறுத்ததால் கலவரம் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது இந்த புகார் குறித்த டிஜிடல் வீடியோ பதிவு மற்றும் குரல் மாதிரிகளை சமர்ப்பிக்க வேண்டும் என தடய அறிவியல் ஆய்வகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே டில்லி காவல்துறை இந்த அறிக்கைகள் வரவில்லை எனக் கூறியதால் விசாரணைக்கு இடையூறாக உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் இந்த அறிக்கைகளை 8 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தடய அறிவியல் ஆய்வகங்கக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி ரோகிணி, டில்லி,, மற்றும் குஜராத் காந்தி நகர் ஆகிய இடங்களில் உள்ள தடய அறிவியல் ஆய்வகங்கள் 8 வாரங்களுக்குள் அறிக்கை அனுப்ப உள்ளதால் விசாரணை ஆகஸ்ட் ,மாதம் 23 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.