டெல்லி
கெஜ்ரிவால் மீது டெல்லி பாஜக வேட்பாளர் தேர்ஹ்ட்ல ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
அடுத்த மாதம் 5 ஆம் தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்று பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து டெல்லியில் தேர்தல் நடத்தை விதி அமளில் உள்ளது.
நேற்று கிழக்கு கிட்வாய் நகர் குடியிருப்பு பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மக்களுக்கு நாற்காலிகள் வழங்கியதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் வழங்க சொன்னதாகவும் தேர்தல் ஆணையத்தில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா புகார் அளித்துள்ளார்.
தனது புகாருடன் நாற்காலிகள் வழங்கியதற்கான வீடியோ ஆதாரத்தையும் வழங்கியுள்ளார்.