ஷார்ஜா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி அணி.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை சேர்த்தது. அந்த அணியின் ஹெட்மேயர் அதிகபட்சமாக 45 ரன்கள் அடித்தார்.
பின்னர், சற்று கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், ராகுல் டெவாஷியா 29 பந்துகளில் 38 ரன்கள் அடித்ததே சிறந்த பெர்ஃபார்மன்ஸ். மற்றபடி, முக்கிய பேட்ஸ்மென்கள் அனைவரும் சொதப்பினர்.
முடிவில், அந்த அணி 19.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 138 ரன்கள் மட்டுமே அடித்து 46 ரன்கள் வித்தியாசத்தில் ஐந்தாவது தோல்வியை சந்தித்தது. அந்த அணி முதல் 2 போட்டிகள் தவிர, தொடர்ந்த தோல்விகளை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணியின் ரபாடா 3 விக்கெட்டுகளையும், ஸ்டாய்னிஸ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.