புதுடெல்லி:
டெல்லி அண்ணா – கலைஞர் அறிவாலயம் இன்று மாலை திறக்கப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் திமுக அலுவலகம் திறக்க நான்கு நாள் பயணமாக கடந்த 30-ஆம் தேதி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார். பிரதமர் மோடி ,மத்திய அமைச்சர்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் ,நிதின் கட்கரி ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் டெல்லி தீன்தயாள் மார்க் பகுதியில் திமுக சார்பில் கட்டப்பட்டுள்ள அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் , சோனியா காந்தி உள்ளிட்ட அவருக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், மார்க்சிஸ்ட் தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.