சென்னை:  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளில் ஒருவரான போலீஸ் பக்ருதின், புழல் சிறையில்   இருந்தே பயங்கரவாதிகளுக்கு போனில்  மெசேஜ் மற்றும் பல்வேறு வகைகளில் தொடர்புகொண்டு பேசிய சம்பவம் வெளியாகி உள்ளது. சிறையில் செல்போன் உள்பட எந்தவொரு தகவல்தொடர்பு சாதனங்களும் கைதிகள் உபயோகப்படுத்த முடியாத நிலையில், பயங்கரவாதிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் வெளியே உள்ள பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு கொண்டு உரையாடி இருப்பரு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை செயலிழந்து விட்டதையே இது எடுத்துக்காட்டுகிறது.

சென்னையில் உள்ள புழல் சிறையில், வெளிநாடு மற்றும் உள்நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பல வெளிநாட்டு கைதிகள், பயங்காவாத அமைப்பை சேர்ந்த கைதிகளும் அடங்குவர். இதனால், சிறையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இருந்தாலும், அவ்வப்போது கைதிகளுக்கு இடையே கலவரம், சிறைக்காவலர்களை கைதிகள் தாக்குவது, கைதிகளிடம் ஆயுதங்கள், செல்போன்கள் பயன்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட தொலை தொடர்பு சாதனங்கள், ஆயுதங்கள் எப்படி வருகிறது என்று தெரியவில்லை என்று சிறை துறையினர் கூறினாலும், சிறைத்துறை காவலர்கள் அனுமதியின்றி தொலைதொடர்பு சானங்கள் உள்ளே உள்ள சிறைக்கைதிகளிடம் செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் புழல் சிறையில் இருந்தபடியே சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கூட்டாளிகளுடன் போலீஸ் பக்ருதீன் என்ற பயங்கரவாதி பேசியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பக்ருதின்  “வீடியோ, வாட்ஸப் கால் மூலமாக வெளியில் உள்ள பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு கொண்டு வந்துள்ளார்.  இதுதொடர்பான விசாரணையில்,  போலீஸ் பக்ருதீன்” கடந்த 3 ஆண்டுகளாக வெளியே உள்ள நபர்களுடன் போன், வாட்ஸ்அப், வீடியோ கால் உள்பட பல வசதிகளுடன் பேசி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.,  அதுபோல, போலீஸ் பக்ருதீனிடம் கைதி சரவணன் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக ஏதாவது சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக என விசாரணை நடைபெற்று வருகிறத. சிறையில் இருந்தே ஒரு பயங்கரவாதி போன் மூலம் வெளியே உள்ளவர்களிடம் பேசிய செயல்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ்நாடு காவல்துறையினர் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில், சமீபகால அதன் செயல்பாடுகள் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சி யினரையும், விமர்சனம் செய்பவர்களையும், விதிகளுக்கு மாறாக நள்ளிரவு சென்று கைது செய்து வரும் தமிழ்நாடு காவல்துறையினர், கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, கொலை, கொள்ளை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தேவையான  ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவது இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், சிறையில் இருந்து பயங்கரவாதி ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக வெளியே உள்ளவர்களிடம் பேசி வந்துள்ள செயல் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காவல்துறை செயலிழந்து விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

பயங்கரவாதி போலீஸ் பக்ரூதீன் யார்?

தமிழ்நாட்டில், இந்து பிரமுகர்களை கொ லை செய்ய ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக செயல்பட்டு வந்தவர்தான் பக்ருதீன். இந்த அமைப்பின் செயலாளராக   பி லா ல் மா லிக் என்பவர். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் நோக்கம் இஸ்லாம்  மதத்துக்கு எதிரானவர்களை கண்டுபிடித்து,  அவர்களை கொலை செய்வதுதான். இந்த அமைப்பிற்கு மாநிலம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்த்து மறைமுகமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பி னர்கள் மூலம், அந்தந்த பகுதி களி ல் உள்ள இந்து  பிரதிநிதிகள், அவர்கள் செயல்பாடு குறி த்த விவரங்களை சேகரித்து,  கொலை பட்டியலை தயாரித்து, கொலை செய்து வந்தனர். இதற்காக இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான்,  இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலரை கொலை செய்துள்ளனர். இந்த அமைப்பைச் சேர்ந்த தலைவன்தான் போலீஸ் பக்ருதீன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிறையில் இருந்தவாறே வெளியே உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.